வாட்டும் வறுமை.. தெருவில் சமோசா விற்கும் பத்திரிகையாளர்- வைரலாகும் புகைப்படம்!

Afghanistan Taliban War Afghanistan Viral Photos
By Sumathi Jun 17, 2022 06:16 AM GMT
Report

ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தலீபான் ஆட்சி 

ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்.

வாட்டும் வறுமை.. தெருவில் சமோசா விற்கும் பத்திரிகையாளர்- வைரலாகும் புகைப்படம்! | Situation Of The Journalist Who Sells Samosas

அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம். அதில், ஆப்கான் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் சமோசா விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

பத்திரிகையாளரின் வாழ்க்கை

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள்.

வாட்டும் வறுமை.. தெருவில் சமோசா விற்கும் பத்திரிகையாளர்- வைரலாகும் புகைப்படம்! | Situation Of The Journalist Who Sells Samosas

சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலீபான்களின் கெடுபிடி ஒருபுறம் வறுமை மறுபுறம் என மக்கள் சொல்ல இயலாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

வறுமையில் மக்கள்

இந்நிலையில் தான், ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் அவர், "தலீபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை. மூஸா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கன் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறர்.

ஆப்கனில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.  

ஹிஜாப் அணியாத இஸ்லாமியர்கள் விலங்குகள் போன்றவர்கள்.. போஸ்டரால் சர்ச்சை!