‘தலீபான்களுடன் இணைந்து செயல்பட வாருங்கள்...’ - சர்வதேச சமூகத்திற்கு பாகிஸ்தான், சீனா அழைப்பு

world
By Nandhini Oct 28, 2021 05:00 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்க படைகளின் வெளியேறியதையடுத்து, கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதனையடுத்து, தாலிபான்கள் ஆட்சியிலிருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால அரசை அமைத்தார்கள்.

தாலிபான்களின் இந்த இடைக்கால அரசை பெரும்பலான நாடுகள் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. எனினும் பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் தலீபான்களின் அரசுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தலீபான் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் சீனா வலியுறுத்தி இருக்கிறது.

இது குறித்து, இருநாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

ஆப்கானிஸ்தானில் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியில் உலகம் கவனம் செலுத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களின் துன்பத்தை தணித்து, அவர்களின் அவநம்பிக்கையை துடைத்தெறிய வேண்டும். ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்பவும், நாடு முழுவதுமாக வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் தலீபான் நிர்வாகத்துடன் தொடர்ந்து ஈடுபடுமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

‘தலீபான்களுடன் இணைந்து செயல்பட வாருங்கள்...’ - சர்வதேச சமூகத்திற்கு பாகிஸ்தான், சீனா அழைப்பு | World