ஹிஜாப் அணியாத இஸ்லாமியர்கள் விலங்குகள் போன்றவர்கள்.. போஸ்டரால் சர்ச்சை!

Afghanistan Taliban War Afghanistan Viral Photos
By Sumathi Jun 17, 2022 03:31 AM GMT
Report

குட்டையான இறுக்கமான தெளிவாக தெரியும் வகையிலான ஆடைகளை அணிவது ஆப்கானிஸ்தானின் உச்சபட்ச தலைவரான அகுண்ட்சாதாவின் உத்தரவுக்கு எதிரானது என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கந்தகார் நகரில் தலிபான் மத காவல்துறையினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடை அணியாத அதாவது ஹிஜாப் அணியாத இஸ்லாமிய பெண்கள் விலங்குகள் போல தோற்றமளிக்க முயற்சிக்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணியாத இஸ்லாமியர்கள் விலங்குகள் போன்றவர்கள்.. போஸ்டரால் சர்ச்சை! | Look Like Animals Taliban On Women Without Hijab

இம்மாதிரியான போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம், அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து ஆப்கானிய பெண்கள் மீது தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

பெண்களுக்கு உத்தரவு

அமெரிக்க படைகள் அங்கிருந்த வரை, ஓரளவுக்கு பெண்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளியேறி அமெரிக்க ஆதரவு ஆட்சி கவிழ்ந்ததிலிருந்து ஓரளவுக்கு கிடைத்த பலன்களும் தற்போது திரும்ப பெறப்பட்டுவருகின்றன.

ஹிஜாப் அணியாத இஸ்லாமியர்கள் விலங்குகள் போன்றவர்கள்.. போஸ்டரால் சர்ச்சை! | Look Like Animals Taliban On Women Without Hijab

பொதுவாக பெண்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானின் உச்சபட்ச தலைவரும் தலிபான் அமைப்பின் தலைவருமான ஹிபத்துல்லாஹ் அகுண்ட்சாதா கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நடவடிக்கை

முகம் உள்பட உடல் முழுவதும் மறைத்து கொண்டே பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என பெண்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் குற்ற தடுப்பு அமைச்சகம், அச்சம் விளைவிக்கும் துறையாக திகழ்கிறது என அவர்களால் வெளிப்படுத்தப்படுகிறது.

இஸ்லாமிய மதத்தின் கடுமையான விதிகளை இந்த அமைச்சகம்தான் விதிக்கிறது. இவர்களின் சார்பில் கந்தகார் நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தேநீர் மற்றும் கடைகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஆனால், உள்ளூர் அலுவலர் ஒருவர் இதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து கந்தகாரில் உள்ள அமைச்சகத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் தயேபி கூறுகையில், இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம்.

முகத்தை மறைக்காத பெண்களின் (பொது இடங்களில்) குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அரசாணையின்படி நடவடிக்கை எடுப்போம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.  

நிற்பதற்கே சிரமம்...உடல்நிலை மோசமான ரஷ்ய அதிபர் புடின் - வைரலாகும் வீடியோ!