துப்பட்டாவை வீசி நூதன திருட்டில் அக்கா-தங்கை - சிசிடிவியால் அதிர்ச்சி!

Chennai Crime
By Sumathi Sep 04, 2024 04:16 AM GMT
Report

துப்பட்டா வீசி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகை பறிப்பு

சென்னை, மாம்பலம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் வயதான பெண்மணி ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் நகை திருடுபோயுள்ளது.

துப்பட்டாவை வீசி நூதன திருட்டில் அக்கா-தங்கை - சிசிடிவியால் அதிர்ச்சி! | Sisters Arrested Stealing Jewelry Train Chennai

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், ரயிலில் ஏற முற்படும்போது இரண்டு பெண்கள் வயதான பெண்மணியின் மீது துப்பட்டாவை வீசி அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏமாற்றிய காதலன்.. நூதனமாக பழிவாங்கிய காதலி - என்ன செய்தார்?

ஏமாற்றிய காதலன்.. நூதனமாக பழிவாங்கிய காதலி - என்ன செய்தார்?

சகோதரிகள் கைது 

அதன்பின் அவர்களிடன் நடத்திய விசாரணையில், முத்து (எ) ரேகா (33), பேச்சி (எ) கண்மணி (36), ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஆந்திராவைச் சேர்ந்த ரயில் நிலைய திருடர்கள். இவர்கள் தாம்பரம், பல்லாவரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட நபர்களின் செயின்களை பறித்துள்ளது தெரியவந்தது.

துப்பட்டாவை வீசி நூதன திருட்டில் அக்கா-தங்கை - சிசிடிவியால் அதிர்ச்சி! | Sisters Arrested Stealing Jewelry Train Chennai

இதனையடுத்து அவர்களிடமிருந்து ஒன்றரை சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.