ஏமாற்றிய காதலன்.. நூதனமாக பழிவாங்கிய காதலி - என்ன செய்தார்?
காதலில் ஏமாற்றிய காதலனை நூதன முறையில் காதலி ஒருவர் பழிவாங்கிய சம்பவம் வைரலாகி வருகிறது.
காதல் மோசடி
மெல்போர்னை சேர்ந்தவர் ஜென்னி என்பவர். அவர் ஸ்டீவ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் காதலர் ஜென்னியை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த ஜென்னி, தனது காதலனுக்கு நூதன முறையில் தண்டனை அளிக்க விரும்பியுள்ளார்.
அதன்படி, உள்ளூரில் இருந்து வெளிவரும் மெக்கே அண்டு விட்சண்டே லைப் என்ற பத்திரிகையில் காதலி ஒரு விளம்பரம் கொடுத்து இருக்கிறார். காதலன் தன்னை ஏமாற்றி விட்டார் என்று அறிந்த ஜென்னி என்ற பெயர் கொண்ட அந்த காதலி,
காதலியின் ஆதங்கம்
பத்திரிகையில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், டியர் ஸ்டீவ். நீ, அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என நம்புகிறேன். நீ எப்படிப்பட்ட மோசடி பேர்வழி என்று தற்போது ஒட்டுமொத்த நகரத்திற்கும் தெரிய வரும் என தெரிவித்து உள்ளார்.
பத்திரிகையின் 4-ம் பக்கத்தில் வெளியான விளம்பரத்தின் கீழே குறிப்பு ஒன்றும் உள்ளது. அதில், இந்த விளம்பரம் உன்னுடைய கிரெடிட் கார்டு உதவியுடனேயே பிரசுரிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பத்திரிக்கை விளம்பரம்
இந்த புகைப்படம் அடங்கிய விளம்பர தகவலை தனது பேஸ்புக்கில், அந்த பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில், விளம்பர தகவலுக்கு பலரும் பதிலளித்து வருகின்றனர். எங்களுக்கு ஸ்டீவ் எவரென தெரியாது.
ஆனால், மிக மிக மோசம் வாய்ந்த ஆள் அவரென்று தெரிகிறது. ஜென்னியை பற்றிய எந்த தகவலையும் நாங்கள் வெளியிட போவதில்லை என தெரிவித்து உள்ளனர். இந்த பேஸ்புக் பதிவிற்கு 3 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
மேலும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து ஜென்னிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.