ரன்வீர் நிர்வாண போட்டோஷூட்டிற்கு எதிர்ப்பு - ஆடைகள் சேகரிக்கும் நூதன நிகழ்வு!

Bollywood Ranveer Singh Viral Photos
By Sumathi Jul 26, 2022 11:48 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்டை கண்டித்து மக்கள் நூதன எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரன்வீர் சிங்

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனின் கணவர். ரன்வீர் சிங்கின் ஆடை ஸ்டைலும் தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரன்வீர் நிர்வாண போட்டோஷூட்டிற்கு எதிர்ப்பு - ஆடைகள் சேகரிக்கும் நூதன நிகழ்வு! | Protest Ranveer By Condemning Nude Photoshoot

அவர் பத்திரிக்கை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து உள்ளார். அவர் தனது சமூகவலைதளத்தில் இதனை பதிவிட்டார்.

நிர்வாணமாக போஸ்

இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர் சிங், எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல.

இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும். ஆயிரக்கணக்கான மக்கள் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்றார். இந்த நிலையில், ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை, இணையத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட்டதற்காக

 மிமி சக்ரவர்த்தி பதிவு

அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான மிமி சக்ரவர்த்தி, ரன்வீர் சிங்கின் புகைப்படங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டுள்ளார்.

அதில், ஒரு பெண் இப்படி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தால், இந்த சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளுமா? இல்லை அந்த பெண்ணுக்குத்தான் இத்தகைய பாராட்டு கிடைக்குமா? என கேட்டிருந்தார்.

எதிர்ப்பு 

இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீருக்கு உடை வழங்கும் இயக்கம் ஒன்று தோன்றியுள்ளது. ஒரு குழு ஆடை நன்கொடை இயக்கத்தை துவங்கி தெருவில் உள்ள மேசையில் ரன்வீர் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியை வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.