ஆடையின்றி நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார்..!
ஆடைகளின்றி நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங்
2010ம் ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகர் ரன்வீர் சிங். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி கொடுத்ததால் முன்னணி நடிகராக உயர்ந்து பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தனது அந்தஸ்தை உயர்த்தினார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையான தீபிகா படுகோனை திருமணம் செய்து கொண்டார் ரன்வீர் சிங். இவர் அணியும் ஆடையும், ஸ்டைலும், தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
நிர்வாண புகைப்படத்தால் சர்ச்சை
இந்நிலையில், கடந்த வாரம் ஒரு பிரபல வார இதழுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. இந்த நிர்வாண புகைப்படத்தை ரன்வீர் சிங் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.
தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இப்புகைப்படத்தைப் பார்த்த சிலர் ரன்வீர் சிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, லில்லி சிங், மசாபா குப்தா, தியா மிர்சா, பானி ஜட்ஜ் உட்பட சிலர் நடிகர் ரன் வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரன்வீர் சிங் கருத்து
இந்த விமர்சனங்களுக்கு ரன்வீர் சிங் பேசுகையில், எல்லோர் முன்னிலையில் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் கிடையாது.
இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால் கூட நான் நிர்வாணமாக இருக்க முடியும். சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
போலீசில் புகார்
இந்நிலையில், ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை, இணையத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புகாரை தொடர்பாக நடிகர் ரன்வீர் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.