பல கோடி கணக்கில் புதிய வீடு வாங்கிய தீபிகா படுகோண் - ரன்வீர் சிங் தம்பதி: எவ்வளவு தெரியுமா?
couple
ranveer singh
deepika padugone
buy new house
By Anupriyamkumaresan
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோண். இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் திரையுலகில் பிசியாக வலம் வருகிறார்.
இந்நிலையில், தீபிகா படுகோண் - ரன்வீர் சிங் தம்பதி, மும்பையில் ரூ. 22 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளனர். கடற்கரை பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளதால், பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்த பகுதியில் சொத்துக்களை வாங்கி வருகின்றனர்.
நடிகை தீபிகா படுகோணும், நடிகர் ரன்வீர் சிங்கும் தற்போது மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.