காதலிக்காக சிறுவன் செய்த வேலை..சத்தமே இல்லாமல் நூதன முறையில் ATM கொள்ளை!
நூதன முறையில் சிறுவன் ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
ATM கொள்ளை
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் வசிப்பவர் சுபம் என்ற சிறுவன். இவர் தன காதலிக்காக செலவு செய்வதற்காக, அந்த பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை மிகவும் புத்திசாலித்தனமாக திருடியுள்ளான். அதாவது, சேதம் செய்யவில்லை, அடுத்த நபர்கள் பணம் எடுப்பதற்கு மிக நூதனமாக திருடியுள்ளனர்.
அதாவது, ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்களை பெவிகால் கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் ஏ.டி.எம்.ல் பணம் வெளியே வராமல் இடையில் சிக்கி கொள்ளும்.
சிறுவன் செய்த வேலை..
வாடிக்கையாளர்கள் பணம் இல்லை என நினைத்து வெளியே சென்றதும் உள்ளே வரும் சிறுவர்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்பை வெளியே எடுத்து பணத்தை திருடியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த முறையை பயன்படுத்தி பல முறை, இந்த சிறுவன் தொடர்ந்து பணம் திருடி வத்ததாக கூறப்படுகிறது.இதனை இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து அடிக்கடி திருடியுள்ளனர். இந்த நிலையில், வாரங்கல் நகரில் இருக்கும் பல ஏடிஎம் மையங்களில் தொடர்ந்து பணம் மாயமாக மறைவதாக பலர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் நடத்திய விசாரணையில் இந்த சிறுவர்கள் செய்த நூதன திருட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொள்ள திட்டத்தை பல முறை திருடிய சுபம் போலீசாரிடம் சிக்காமல் தனது காதலியுடன் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. தற்போது போலீசார் இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.