எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசார்

Sbi atm theft
By Petchi Avudaiappan Jul 02, 2021 06:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

தமிழக எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியும், கொள்ளை கும்பலின் தலைவன் சவுகத் அலியை தனிப்படை போலீசார் ஹரியானாவில் கைது செய்தனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் சில நாட்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் இயந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருந்தனர்.

 சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த நிலையில் அவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரிய வந்ததையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ஹரியானா சென்றனர்.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசார் | Sbi Atm Theft Gang Leader Arrested In Haryana

இந்த கொள்ளை வழக்கில் அமீர் விரேந்தர் மற்றும் நசீம் உசைன் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் ஹரியானாவில் கைது செய்து பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு போலீசார் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் முக்கிய குற்றவாளியான சவுகத் அலி என்பரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளை கும்பலின் தலைவனான சவுகத் அலி தனிப்படை போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து சவுகத் அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.