உலகின் பணக்கார இளவரசி..! அரண்மனை வாழ்க்கை, சொந்தமாக பேஷன் பிராண்ட் - சொத்துமதிப்பு..?
தாய்லாந்து நாட்டு இளவரசி 'சிரிவண்ணவாரி நாரிரத்னா ராஜகன்யா' குறித்த தகவல்.
தாய்லந்து இளவரசி
தாய்லந்து நாட்டில் மன்னராட்சி முறை நடந்து வருகிறது. அந்நாட்டு மன்னர் வஜ்ரலாங்கோர்னுக்கும், அவரது முன்னாள் மனைவி சுஜாரினி விவச்சரவோங்சேக்கும் பிறந்த பெண் குழந்தை 'சிரிவண்ணவாரி நாரிரத்னா ராஜகன்யா'.
கடந்த 2005ம் ஆண்டு, அவரது தாத்தா மன்னர் பூமிாபல் அதுல்யதேஜின் அரச கட்டளையால் 'சிரிவண்ணவாரி' இளவரசி ஆனார். இளவரசி என்பதால் 'சிரிவண்ணவாரி' அரண்மனையிலேயே தங்கி ஓய்வெடுக்கவில்லை. அவர் விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்.
பிலிப்பைன்ஸில் நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் தாய்லாந்து அணிக்காக பேட்மிண்டனில் பங்கேற்று, குழுவில் தங்கம் வென்றார். அதுமட்டுமல்லாமல் இளவரசி பேஷனில் அதிக ஆர்வம் கொண்டவர்.
சொத்து மதிப்பு
கடந்த 2007ம் ஆண்டு பாரீஸில் தனது பேஷன் ஷோ ஒன்றை நடத்தினார். அதற்கு 'பிரசன்ஸ் ஆஃப் தி பாஸ்ட்' என பெயரிடப்பட்டது. மேலும், 'சிரிவண்ணவாரி' என்ற பேஷன் பிராண்டை நடத்தி வருகிறார்.
உலகின் பணக்கார இளவரசிகளில் ஒருவராக சிரிவண்ணவாரியும் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.367 கோடியாகும். இவரது தந்தையான தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்னும் உலகின் பணக்கார மன்னர் ஆவார்.
அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2.49 லட்சம் கோடி முதல் ரூ.5.81 லட்சம் கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இளவரசி சிரிவண்ணவாரி ஒரு சேகரிப்பாளரும் கூட. பல வைரங்கள், மரகதங்கள் மற்றும் பிற ரத்தினங்களும் அவரது சேகரிப்பில் இடம் பெற்றுள்ளன.