மனைவியிடம் பேசாத அண்ணாமலை; டைம் கேட்ட ரோகினி - விஜயா எடுத்த முடிவு!
சிறகடிக்க ஆசை தொடரின் ப்ரோமோ வைரலாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று ‘சிறகடிக்க ஆசை’. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதில் முத்து மீனாவின் நகையை மனோஜ் விற்ற சம்பவம் பெரும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அண்ணாமலை இரும்பிக் கொண்டிருக்கிறார். விஜயா தண்ணி கொண்டு வந்து கொடுத்தும் அதை வாங்கிக் கொள்ளவில்லை. பின் விஜயா இருக்கும் இடத்திற்கு அண்ணாமலை போகவில்லை.
சீரியல் ப்ரோமோ
இதனால் விஜயா ரூமை விட்டுக்கொடுத்து நான் வெளியே தூங்கிக் கொள்கிறேன் என்றார். எல்லோருமே விஜயாவிடம் அண்ணாமலை இடம் பேச சொல்லி கேட்கிறார்கள். ஆனால், விஜயா வழக்கம்போல சொல்லி திட்டிக் கொண்டிருக்கிறார். இனிவரும் நாட்களில் விஜயா- அண்ணாமலை இடையே இருக்கும் விரிசல் அதிகமாகுமா?
அண்ணாமலை, விஜயாவிடம் பேசுவாரா? முத்து -மீனா என்ன செய்யப் போகிறார்கள்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.. வரும் நாட்களில் வேறு என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று..