ஐஸ்வர்யா என் அம்மாக்கிட்ட இப்படித்தான் இருப்பாங்க - போட்டுடைத்த அபிஷேக் பச்சன்!
ஐஸ்வர்யாராய் மற்றும் தாய் குறித்து அபிஷேக் பச்சன் பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அபிஷேக் பச்சன்
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
சமீப காலமாக அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் கருத்து வேறுபாடால் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவி வருகிறது. அந்த வகையில், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியாக வந்தனர்.
மனைவி - தாய் உறவு
மேலும், க்ரே டைவர்ஸ் தொடர்பான இடுகை ஒன்றை அபிஷேக் பச்சன் லைக் செய்ததும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் பழைய பேட்டி ஒன்று பரவி வருகிறது. காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கரண் ஜோஹருக்கு பேட்டியளித்த அபிஷேக் பச்சன்,
தனது தாயும், தனது புதிய மனைவி ஐஸ்வர்யா ராயும் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பேசுவார்கள். ஒரு பெண் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது அவருக்கு வெளிப்படையாக பேசுவதற்கு இடமில்லாமல் இருப்பதாக உணருவார்.
அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூடிய இடத்தில் இருக்கும் ஒரே நபர் அவருடைய மாமியார் தான் என்று நான் நினைக்கிறேன். எனது தாயும், மனைவியும் நன்றாக பேசிக் கொள்வதால், அந்த பிரச்சனை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.