Sunday, Jul 13, 2025

குழந்தையை வீட்டில் சிறை வைத்து தாக்கிய தாய், ஆண் நண்பர் - காயங்களுடன் மீட்பு!

Karnataka India Child Abuse Crime
By Jiyath a year ago
Report

பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையை வீட்டில் சிறை வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தை சித்ரவதை 

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் அருகே வீரபத்ரநகரில் வசித்து வருபவர் சாரின். இவர் தனது கணவரை பிரிந்து 3 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

குழந்தையை வீட்டில் சிறை வைத்து தாக்கிய தாய், ஆண் நண்பர் - காயங்களுடன் மீட்பு! | Single Mother Assaults 3 Year Old Child

இந்நிலையில் குழந்தையை வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்து சாரின் சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும், குழந்தையின் தலை, கை, கால் என அனைத்து இடங்களிலும் கொடூரமாகி தாக்கியுள்ளார்.

அந்த குழந்தையின் உடல் முழுக்க காயங்கள் இருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் மகளிர் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற அவர்கள், அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 வயது குழந்தையை மீட்டனர்.

அப்படியொரு அசாத்திய திறமை..! உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை - குவியும் வாழ்த்து!

அப்படியொரு அசாத்திய திறமை..! உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை - குவியும் வாழ்த்து!

கொடூர தாய் 

மேலும், இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், சாரின் வேலைக்குச் செல்லும் போது குழந்தையை அறைக்குள் அடைத்து வைத்து செல்வதும், தினமும் தனது ஆண் நண்பரை வீட்டுக்கு அனுப்பி குழந்தைக்கு உணவு வழங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.

குழந்தையை வீட்டில் சிறை வைத்து தாக்கிய தாய், ஆண் நண்பர் - காயங்களுடன் மீட்பு! | Single Mother Assaults 3 Year Old Child

மேலும், சாரினின் ஆண் நண்பரும் தன்னை குக்கரால் தாக்கினார் என்று அந்த குழந்தை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த குழந்தை நலப் பாதுகாப்பு அதிகாரிகள் குழந்தையிடம் "அம்மாவிடம் செல்கிறாயா" என கேட்டனர். அதற்கு அந்த குழந்தை மறுத்து விட்டதால், பாதுகாப்பு மையத்திற்குக் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், சாரினுக்கு முறையான, கவுன்சிலிங் நடத்தப்பட்டு, அதன்பிறகு தான் குழந்தையை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.