அப்படியொரு அசாத்திய திறமை..! உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை - குவியும் வாழ்த்து!
120 பொருட்களை அடையாளம் காண்பித்து 4 மாத பெண் குழந்தை உலக சாதனை படைத்துள்ளார்.
4 மாத குழந்தை
ஆந்திர பிரதேச மாநிலம் நாடிகமா பகுதியைச் சேர்ந்த ஹேமா என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கைவல்யா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை காய்கறிகள், பழங்கள், பறவைகள் புகைப்படங்கள் என 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.
உலக சாதனை
தனது குழந்தையின் திறமையை உலகத்திற்கு தெரியப்படுத்த நினைத்த ஹேமா, அதனை வீடியோ எடுத்து நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் வீடியோவை கண்ட நோபல் உலக சாதனை குழுவினர், கைவல்யாவுக்கு உலக சாதனைக்காங்க சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளனர். பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த அந்த குழந்தைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எலும்புக் கூடுகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை தெரியவேண்டும்:காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் IBC Tamil
வெளிநாடொன்றில் பதிவான பயங்கர துப்பாக்கி சூடு...! சுமார் 17 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம் IBC Tamil