தெய்வம் தந்த பூவே; சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று - வீட்டிலிருந்து தொடங்கட்டும்!
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.
பாலின சமத்துவம்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் வகையில் பெண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அணுகப்படுகிறது.
அதே சமயம், இந்த நாள் பெண்கள் தங்கள் முழு திறனையும் உணர ஊக்குவிக்கவும், உலகம் முழுவதும் பெண் குழந்தைகளின் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் அனுசரிக்கப்படுகிறது.
உரிமைகளில் முதலீடு
இந்த ஆண்டு (2023), யுனிசெஃப் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினத்திற்காக தேர்ந்தெடுத்த கருப்பொருள் '"பெண்கள் உரிமைகளில் முதலீடு செய்யுங்கள், எங்கள் தலைமை, எங்கள் நல்வாழ்வு" என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, 10 மில்லியன் பெண்கள் வரை குழந்தை திருமண அபாயத்தில் உள்ளனர். 4 பெண்களில் ஒருவர் கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்கின்றனர். ஆனால், 10 ஆண்களில் ஒருவர் தான் அப்படி இருக்கின்றனர்.
மாற்றம் இங்கிருந்தே..
சமூகத்துக்கான மாற்றங்கள் அனைத்தும் நம்மில் இருந்தும், நமது வீட்டிலிருந்தும் தொடங்கப்பட வேண்டும். பெண் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு முதல் உயர்கல்வி வரை உறுதி செய்யப்பட வேண்டும். பொருளாதார அளவில் சுயமாக நிற்க உதவுவதும், சமத்துவம் மற்றும் வளமான எதிர்காலத்தை அவர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.
வீடுகளில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை சமமாக பாவித்து வளர்க்க வேண்டும். குறிப்பாக பெண்களை மதிப்பது குறித்து ஆண் குழந்தைகளுக்கு அறிவுறுத்தி வளர்ப்பது கூட சமுகத்தில் மிக பெரிய மாற்றத்தை விளைவிக்கும்.
பெண் குழந்தைகளை போற்றுவோம். வாய்ப்புகளை தட்டிப் பறிக்காமல் நல்ல எதிர்காலத்தை அளிப்போம்!