தெருவுல மூஞ்சி காட்ட முடியாது.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க? - ஐஷுவை ரோஸ்ட் செய்த சுசித்ரா!
பிக் பாஸ்ஸில் போட்டியாளர்கள் குறித்து பாடகி சுசித்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் தான் பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்கள் கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டனர். இந்த வீட்டில் பலர் ஜோடி ஜோடியாக சேர்ந்து கன்டென்ட் கொடுப்பதன் பேரில் பல வேலைகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஐஷுவிடம் நிக்சன் எல்லை மீறும் காட்சிகளின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே இருவரும் மைக்கை கழட்டி விட்டு பேசுவது, கண்ணாடியில் முத்தம் கொடுப்பது, ஒரே தட்டில் சாப்பிடுவது, சில்மிஷம் செய்யும் வீடியோ வைரலாகி வந்தது, இதற்கு பலர் கண்டனம் விதித்தனர்.
பாடகி பேட்டி
இந்நிலையில், பிரபல பாடகி சுசித்ரா பிக் பாஸ் குறித்து பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக வந்தவர்களின் குடும்பத்தினர் மிகப்பெரிய பயத்துடன் இருக்கிறார்கள். இதில் ஐஷூவின் பெற்றவர்களை நினைத்தால் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்களால தெருவுல மூஞ்சி காட்ட முடியாது.
நிக்ஸனுடன் அந்த பொண்ணு என்னெல்லாம் பண்ணுது. காலைல நிக்ஷனுடன் என்ன வேலை பண்ணுது. இங்க, அங்க அடி சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கு. ரொம்ப தப்பான விஷயம்" என்று கூறியுள்ளார்.