பெண் இப்படிதான் இருக்கனும்.. ஆனா வினுஷாவுக்கு அப்படி இருக்கு, மோசமாக பேசிய போட்டியாளர் - பொங்கி எழுந்த பிரபலம்!

Bigg Boss Tamil TV Serials Tamil Actress
By Vinothini Oct 23, 2023 09:00 AM GMT
Report

போட்டியாளர் ஒருவர் வினுஷா பற்றி உருவக்கேலி செய்தது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் முதல் வாரத்தில் இருந்தே சண்டையை ஆரம்பித்துவிட்டனர். தற்பொழுது டாஸ்க்குகள் நடந்து வருகிறது, அதனால் ஆட்டம் சூடு பிடிக்கிறது.

vinusha

சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது.

அந்த இடம் தெரிந்தது.. அதை வைத்து மோசமாக பரப்பினார்கள் - ஓப்பனாக பேசிய கேப்ரில்லா!

அந்த இடம் தெரிந்தது.. அதை வைத்து மோசமாக பரப்பினார்கள் - ஓப்பனாக பேசிய கேப்ரில்லா!

வைரல் பதிவு

இந்நிலையில், போட்டியாளர் நிக்சன் குறித்த ஒரு சர்ச்சை வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் நிக்சன், "வினுஷா என்னுடைய டைப் கிடையாது. ஒரு பெண் என்றால் ஒரு சரியான உருவமைப்பு பெண் வேண்டும். எது எது எவ்வளவு இருக்க வேண்டுமோ அதெல்லாம் சரியாக இருக்க வேண்டும். அவருடைய மண்டை கொஞ்சம் சின்னதாக இருக்கிறது.

மற்றபடி அவருடைய கண், உடை அலங்காரம் மற்றபடி எனக்கு பிடிக்கும் " என்று பேசியுள்ளார்.

இதற்கு நடிகை சனம் செட்டி, "நிக்ஸனிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை. உருவக்கேலி மற்றும் பாகுபாடு கொண்ட மனநிலையின் உச்சம். இதனால் பாகுபாடு வினுஷா இப்படி நடத்தப்படுகிறாரா ? கமல் சார் இதுகுறித்து கவனிப்பார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.