நோட் பண்ணிருக்கேன்.. விஜய் மட்டும் தான் அதை செய்வார் - நடிகை வெளிப்படை பேட்டி!
நடிகர் விஜய் குறித்து சுனைனா வெளிப்படையாக பேசியுள்ளார்.
சுனைனா
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா. இவர் நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்யின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் நடித்தார் ஆனால் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட காட்சியின் நடித்திருந்தார்.
இவர் கடைசியாக ரெஜினா படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி வெளியானது.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "விஜயிடம் இருக்கக்கூடிய தனிப்பட்ட குணம் என்றால் அவரிடம் இருக்கக்கூடிய மேனரிசம் தான். திரைப்படங்களில் நீங்கள் பார்க்கக்கூடிய சில முகபாவனைகள் மற்றும் மேனரிசம் நடிகர் விஜயிடம் இயற்கையாகவே இருக்கிறது.
அதை நான் படப்பிடிப்பு தளத்தில் கவனித்திருக்கிறேன். ஒரு காட்சியை விவரித்தால் அதற்குண்டான முகபாவணையை அடுத்த நொடியே கொண்டு வந்து விடுவார் நடிகர் விஜய். அது அவருக்கு மட்டும் தான் வரும்" என்று கூறியுள்ளார்.