Friday, Apr 4, 2025

அட்ஜஸ்ட்மென்ட்.. சொகுசா வாழலாம்.. புடிச்சா பண்ணுவேன் - நடிகை ரேகா நாயர் வெளிப்படை!

Tamil Cinema Tamil Actress Actress Rekha Nair
By Vinothini a year ago
Report

நடிகை ரேகா அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ரேகா நாயர்

தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். இவர் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்ததால் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.

actress rekha nair

அவர் நடித்தது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்தார். அதன்பின்னர், கடற்கரையில் அவர் வாக்கிங் செல்லும்பொழுது அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அதன்மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனார். இவர் தொடர்ந்து பேட்டிகளில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

நான் சிரிச்சதை பார்த்து என் பொண்ணு.. அப்படி பண்ணுவானு நினைக்கல - சாண்டி மாஸ்டர் பேட்டி!

நான் சிரிச்சதை பார்த்து என் பொண்ணு.. அப்படி பண்ணுவானு நினைக்கல - சாண்டி மாஸ்டர் பேட்டி!

நடிகை பேட்டி

இந்நிலையில், இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சினிமாவில் மட்டும் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இல்ல எல்லாத்துறையிலும் இருக்கு. ஆனால், சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் அப்பட்டமாக தெரிகிறது. அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால், ஐ போன் வாங்கலாம், சொகுசு கார் வாங்கலாம், ஈசியார்ல வீடு வாங்கலாம் என நடிகைகள் நினைத்துக் கொண்டு அட்ஜெஸ்ட்மென்ட் செய்கிறார்கள்.

actress rekha nair

என்னிடம் யாரவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கிறார் என்றால் அந்த நபரை பிடித்து இருந்தால் போவேன், அவரை பிடிக்கவில்லை என்றால் போகமாட்டேன்.

என்கிட்ட வந்து அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னா உடம்புக்கு எத்தனை கோடி தருவனு கேட்பேன் அவனால முடியாது மூடிக்கிட்டு போய்டுவான், அப்படி தைரியமாக இருக்கவேண்டும் பயந்து விட்டால் எதுவும் செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.