நான் சிரிச்சதை பார்த்து என் பொண்ணு.. அப்படி பண்ணுவானு நினைக்கல - சாண்டி மாஸ்டர் பேட்டி!
டான்ஸ் மாஸ்டர் சாண்டி லியோ படம் குறித்து பேசியுள்ளார்.
சாண்டி மாஸ்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் சாண்டி. இதனை தொடர்ந்து மானாட மயிலாட போன்ற பல நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார். பின்னர் பல படங்களில் கோரியோகிராப் செய்துள்ளார்.

அதன்பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக பங்குபெற்று அதில் இறுதி வரை வந்தார். தற்பொழுது விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் வில்லன் ரோலில் நடித்துள்ளார்.
மாஸ்டர் பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் லியோ குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "இந்த கேரக்டரில் நான் நடித்த பிறகு என்னுடைய மகள் என்னை மான்ஸ்டர் என்று தான் கூப்பிடுவாள். நான் அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த கொஞ்ச நாளைக்கு என் பக்கத்திலேயே என் பொண்ணு வரவில்லை.

அது போல தியேட்டரில் நாங்க அந்த படத்தை பார்க்கும்போது என்னை விஜய் அடிக்கும்போது அப்பாவை அடிக்காதீங்க என்று என் பொண்ணு அழுதுட்டா.
அது போல இப்போது நான் அவகிட்ட விளையாடிக்கிட்டு இருக்கும்போது நான் அந்த மாதிரி சிரிச்சா அவ உடனே மான்ஸ்டர் என்கிட்ட வராத போயிரு என்று கத்திருவா. தன்னுடைய வெற்றிக்கு காரணமே என்னுடைய மனைவிதான் என் மனைவி எனக்கு கொடுக்கிற சப்போர்ட்டு தான்" என்று கூறியுள்ளார்.
You May Like This Video
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil
சுற்றறிக்கை புனிதமானது என்றால் மக்கள் ஆணை என்ன மலிவானதா? வடக்கு ஆளுநரின் அதிகார வெறி உச்சம் IBC Tamil