இயக்குனர் 6 மாசம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்.. நான் அதை எதிர்கல - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஓபன் டாக்!
சீரியல் நடிகையிடம் இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை லாவண்யா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருபவர் நடிகை லாவண்யா. இவர் முதலில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் மூன்றாவது ரீப்ளேஸ்மெண்ட்டாக வந்தவர்.
இதையடுத்து சமீபத்தில் தான் இந்த தொடர் நிறைவு பெற்றது, இவர் மாடலிங் செய்து அதில் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் வேற மாறி ஆபிஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த சமயத்தில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டது குறித்து பேசியுள்ளார்.
லாவண்யா பேட்டி
இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில், "எனக்கு ரொம்பவே தெரிந்த ஒரு காஸ்டிங் இயக்குனர். ஒருமுறை என்னை காண்டெக்ட்டில் இருக்க சொன்னார். ஆனால் மற்றவர்கள் நினைப்பது போல சும்மா பேசும் காண்டெக்டாக இல்லை. அவனுடன் 6 மாதம் ஒன்றாக வாழ சொன்னான். அதுக்கு மேல் வேண்டாம் என்றான்.
அப்படி இருந்தால் நீ வேற லெவலுக்கு போய்டுவ. அது மட்டும் இல்லாமல் மீடியாவில் 3 நாள் பொண்ணுங்க பேரை சொன்னான். அவர்கள் ஒண்ணுமே இல்லாமல் இருந்தார்கள். இப்ப பாரு வீடு, கார் என செட்டில் ஆகிவிட்டனர் என்றான்.
நீயும் அப்படி இருக்கலாம் என அவன் சொன்னபோது நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். ஏன்னா நான் அப்போது தான் வளர்ந்து வந்தேன். நான் அவனை முறைத்து என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை. அதனால் அவனை எதிர்த்து பேசாமல் அமைதியாக நகர்ந்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.