பிரபல சீரியல் நடிகையின் அம்மா முன் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட இயக்குனர் - வேதனையை பகிர்ந்த நடிகை!
சீரியல் நடிகையின் தாய் முன்னரே அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியது குறித்து பேட்டியளித்துள்ளார்.
நடிகை
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி சர்மா. இவர் காலேஜ் படித்து முடித்ததும் மாடலிங் மூலமாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது இவருடைய அம்மாவோடு தான் வாய்ப்பு தேடி போயிருக்கிறார் பல இடங்கள் அவரோட தான் ஏறி இறங்கினார். அப்பொழுது அவருக்கு நடந்த ஒரு பிரச்சனை குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை
இந்நிலையில், சமீப காலமாக பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த பிரச்சனைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அதுபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்துவரும் லாவண்யா தன்னிடம் வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று ஒரு நபர் சொன்னதை குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார் அதை சொல்லி கண்ணீரும் விட்டார். தற்போது சுவாதியும் அவர் வாய்ப்பு தேடும் பொழுது இவ்வாறு அவரது அம்மா முன்னரே அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.