விவாகரத்துக்கு யார் காரணம்..? அத ஏத்துக்கவே முடியல - உண்மையை உடைத்த சைந்தவி!

Tamil Cinema G V Prakash Kumar Tamil Actors Tamil Actress Saindhavi
By Jiyath May 16, 2024 12:13 PM GMT
Report

தனது விவாகரத்து முடிவு தொடர்பாக பரவி வரும் வதந்திகளுக்கு பாடகி சைந்தவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

ஜிவி பிரகாஷ் - சைந்தவி

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வளம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

விவாகரத்துக்கு யார் காரணம்..? அத ஏத்துக்கவே முடியல - உண்மையை உடைத்த சைந்தவி! | Singer Saindhavi Sad On Her Divorce

தற்போது இவர்கள் இருவரும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனிடையே இவர்களது விவாகரத்து முடிவு குறித்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு சைந்தவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

62 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல; இப்படி ஒரு காரணமா? மனம் திறந்த கோவை சரளா!

62 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல; இப்படி ஒரு காரணமா? மனம் திறந்த கோவை சரளா!

மன உளைச்சல் 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "எங்கள் தனிப்பட்ட விவாகரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தும் பல யூடியூப் சேனல்கள் அவர்களுக்கு கிடைத்த தகவல்களை கொண்டு கட்டுக்கதைகளை உருவாக்குவது மன உளைச்சலை தருகிறது.

விவாகரத்துக்கு யார் காரணம்..? அத ஏத்துக்கவே முடியல - உண்மையை உடைத்த சைந்தவி! | Singer Saindhavi Sad On Her Divorce

எங்கள் விவாகரத்திற்கு யாரும் காரணம் இல்லை. ஒருவரின் மதிப்பை குலைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இது எங்களின் நலனுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. பள்ளி காலத்திலிருந்தே நானும் ஜிவி பிரகாஷும், கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். இனியும் அந்த நட்பை தொடர்வோம்.. நன்றி" என்று தெரிவித்துள்ளார்.