62 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல; இப்படி ஒரு காரணமா? மனம் திறந்த கோவை சரளா!
ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? என்பது குறித்து நடிகை கோவை சரளா பேசியுள்ளார்.
கோவை சரளா
தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. இவர் வடிவேலு, விவேக், கௌண்டமணி, செந்தில் என பல நகைச்சுவை நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார். மேலும், இதுவரை மொத்தம் 900 படங்களில் நடித்துள்ள கோவை சரளா, கதாநாயகியாக 15 படத்தில் நடித்துள்ளார்.

கடைசியாக அரண்மனை 4 படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது 62 வயதாகும் கோவை சரளா, இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்ற கேள்வி பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு கோவை சரளா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
என்ன காரணம்?
அவர் கூறுகையில், 'பிறக்கும் போது நாம் தனியாகத்தான் பிறக்கிறோம். அதே போல் இறக்கும் போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்று எனக்கு தோன்றியது. சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.

திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றுக்கொண்ட பல பெற்றோர்கள் இன்று அந்த குழந்தைகள் கைவிட்டதால் தனியாக தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர், எனக்கு யாரையும் சார்ந்து வாழ பிடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil