புழுத்து நெழியுது.. நாக்கை இழுத்து வச்சி.. வைரமுத்து வீட்டுக்கு தனியா அனுப்புங்க - கடுப்பான சின்மயி!

Tamil Cinema Vairamuthu Chinmayi
By Vinothini Nov 06, 2023 04:30 PM GMT
Report

பாடகி சின்மயி வைரமுத்து குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சின்மயி

தமிழ் சினிமாவில் பல மெலடி பாடல்களை பாடி அனைவர் மனத்திலும் இடம் பிடித்தவர் பாடகி சின்மயி. இவர் முதலில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருந்தார். பின்னர் இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

singer chinmayi and vairamuthu

இவருக்கும் நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது, சமீபத்தில் தான் இவரது குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டார்.

கீர்த்தியும் பிரியாவும் அந்த இடத்திற்கு போனது தான் காரணமே.. எல்லாம் போய்டுச்சு - பகீர் கிளப்பிய பிரபலம்!

கீர்த்தியும் பிரியாவும் அந்த இடத்திற்கு போனது தான் காரணமே.. எல்லாம் போய்டுச்சு - பகீர் கிளப்பிய பிரபலம்!

பாடகி பேட்டி

இந்நிலையில், பாடகி சின்மயி சமீபத்தில் அளித்த பேட்டியில் வைரமுத்து குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "ஏ.ஆர் ரஹ்மானை நான் ஒரு குருவாக நினைத்தேன் என்றால், வைரமுத்துவை ஒரு பெரிய இடத்தில் வைத்திருந்தேன். அதை அவரே உடைத்து, அவரை அவரே அசிங்கப்படுத்திக் கொண்டார். மீடூ விவகாரத்தில் சிக்கிய பலர் மாறவே இல்லை.

singer chinmayi

இன்றும் அப்படியே தான் இருக்கிறார்கள். உண்மையைச் சொன்ன என்னை கடுமையாக சாடி திட்டி விட்டு தப்பு செய்த அவருக்கு மகுடம் சூட்டி அழகு பார்க்கிறீர்களே உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா?. நீங்களெல்லாம் பெண் பாதுகாப்பு, பெண்ணியம் முற்போக்குத்தனம், போன்றவற்றை பற்றி பேசினால் அவர்களது நாக்கை இழுத்து வைத்து சூடு வைக்க வேண்டும்.

நான் வைரமுத்து பற்றி பேசுவது பொய் என்று சொன்னால், அவர்களது வீட்டுப் பெண்ணை வைரமுத்துவிடம் தனியாக விட்டு விட்டு செல்ல சொல்லுங்கள் பார்ப்போம். செல்ல மாட்டார்கள். கூடவே தான் நிற்பார்கள்.

காரணம் என்னவென்றால் எல்லோருக்கும் அவரைப்பற்றி நன்றாக தெரியும். அவரை நான் உத்தமர் என்று சொன்னால் தான் இங்கு பலரும் சிரிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

You May Like This Video