என் அம்மா இருக்குறது தெரிந்ததே என்ன அந்த இடத்தில் தொட்டார் : வைரமுத்து குறித்து சின்மயி கொடுத்த ஷாக் இண்டர்வியூ
வைரமுத்து குறித்து பாடகி சின்மயி அளித்த பேட்டி தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
சின்மயி மி டு விவகாரம்
பாடகி சின்மயி வைரமுத்து மீது மிடு புகார் இணையத்திலும் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு சின்மயிற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஒரு பிரபல யூடியூப் நிறுவனத்திற்கு பேட்டியளித்தார் அதில், ஆரம்பத்தில் வைரமுத்து குறித்து புகாரினை ட்விட் போடும்போது ஆரம்பத்தில் இருந்தாலும், உண்மையை வெளியுலகிற்கு கொண்டுவர துணிச்சலுடன் செய்தேன். பலரும் நான் தெலுங்கு மொழியை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்.
நான் சுத்தமான தமிழச்சி. அதனால் தான் எனக்கு இவ்வளவு திமிரு எனக் கூறினார் , அதுமட்டுமில்லாமல் கவிஞர் வைரமுத்துவை குறித்து நான் மட்டும் புகார் அளித்ததாக சிலர் சொல்லி இருந்தார்கள்.ஆனால், என்னுடன் சேர்ந்து 19 பெண்கள் அவர் மீது புகார் அளித்திருக்கிறார்கள். அது வெளியே வரவில்லை. என்னை மட்டும் டார்கெட் செய்தனர் எனக் கூறினார்.
வைரமுத்துக்கு அரசியல் பின்புலம் அதிகம் இருக்கிறது. எனக்கு பல கொலை மிரட்டல்கள் எல்லாம் வந்தது. லாரி ஏற்றி கொன்று விடுவேன் என்றெல்லாம் மிரட்டல் வந்தது .நான் அதற்கெல்லாம் பயப்படவில்லை. அது மட்டுமில்லாமல் என்னிடம் மொபைல் மூலம் மிரட்டிய ரெக்கார்டிங் எல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
சில ஆடியோக்களை வெளியிடுவேன்
இங்கு முக்கியமாக அனைவரும் கேட்பதே ஆதாரங்கள் தான் அதற்காக அவர் ( வைரமுத்து) 15 வருடங்களுக்கு முன்பு என் மார்பகங்களை தொட்டதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் இல்லை ,இத்தனைக்கும் இந்த சம்பவம் நிகழ்ந்த போது என்னுடன் எனது தாயார் வந்திருப்பது தெரிந்தும் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இந்த சம்பவத்தினால் ,எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சில ஆடியோக்களை வெளியிடுங்கள் என்று கூறி சில் ஆடியோக்களை எனக்கு தெரிந்தவர்களிடம் கொடுத்து வைத்துள்ளேன் என்று பெரிய ஷாக்கினை கொடுத்தார் சின்மயி .
எனக்கு உயிர் பயம் கிடையாது
மேலும், தயாரிப்பாளர் ராஜன் ஒரு பேட்டியில் என்னை விமர்சிக்கும் போது . என்னிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் உன்னை சிதைத்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி இருந்தார்.
எனக்கு உயிர் பயமெல்லாம் கிடையாது. மிஞ்சிப்போனால் கொலை தான் செய்வார்கள். எல்லாத்தையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் எனக் கூறினார்.
அதே சமயம் மீ டு என்ற ஒன்றை நான் உருவாக்கவில்லை. ஊடகமும், சுற்றி இருந்தவர்களும் மீ டு பிரச்சனையில் என்னை ஒரு பகடைக்காயாக மாற்றிவிட்டார்கள் என்று சின்மயி கூறினார்.