கீர்த்தியும் பிரியாவும் அந்த இடத்திற்கு போனது தான் காரணமே.. எல்லாம் போய்டுச்சு - பகீர் கிளப்பிய பிரபலம்!
பிரபலம் ஒருவர் நடிகைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல இயக்குநர்கள் விரும்பினர்.
அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடம் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் டாப் நடிகர்கள் பலருடன் இனைந்து நடித்துள்ளார். தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு மருத்துவர் காந்தராஜன் அளித்த பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "உண்மையில் கீர்த்தி சுரேஷ் பரிதாபத்துக்குரியவர், சினிமாவில் அறிமுகமாகும்போது ரொம்பவே அழகாக இருந்தார். ஆனால் நடிகைகளை அழிப்பதற்கென்றே ஒரு விஷயம் இருக்கிறது.
அது என்னவென்றால் பியூட்டி பார்லர்தான். அந்த பியூட்டி பார்லர் என்ற விஷயத்துக்குள் கீர்த்தி சுரேஷ் சென்றார். அதன் பிறகு அவரது அழகெல்லாம் போய்விட்டது. கவர்ச்சி போனால் நடிகைகள் காணாமல் போய்விடுவார்கள்.
கீர்த்தி சுரேஷ் அதனால்தான் வந்தவுடன் காணாமல் போய்விட்டார். கீர்த்தி சுரேஷ் போல்தான் ப்ரியா பவானி சங்கரும். ப்ரியா பவானி சங்கர் மீது ரொம்பவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரும் காணாமல் போய்விட்டார்" என்று கூறியுள்ளார்.