என் மனைவியை முதல்முறை பார்த்தபோது.. அதை பற்றி கேட்டுட்டேன் - நடிகர் ஓபன் டாக்!
நடிகர் தனது மனைவியை பொண்ணு பார்த்தது குறித்து பேசியுள்ளார்.
அருண் விஜய்
தமிழ் சினிமாவில் 90ஸ் நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்து கண்ணு அவர்களின் மகன் அருண் விஜய். இவர் தமிழ் சினிமாவில் முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அவர் கடந்த 1994ல் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், அவரது படங்கள் பெரிதளவு வெளியே ரீச் ஆவதில்லை. பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. மேலும், இவர் தொடர்ந்து பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகர் பேட்டி
இந்நிலையில், இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஹோட்டல் ஒன்றில் பெண் பார்க்க சென்றோம். அப்போது பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என கூறினேன். அவங்க குள்ளமாக இருந்ததால், ஹீல்ஸ் போட்டிருந்தாங்க. இதனால், நான் அவரிடம் எவ்வளவு பெரிய ஹீல் போட்டு இருக்கீங்க என்று கேட்டேன்.
ஆனால் ஆர்த்தி மிகவும் கேஷுவலாக… காலை நீட்டி இதோ நீங்களே பார்த்துக்கோங்க என்றார். அப்போது தான் தெரிந்தது இதையெல்லாம் பெண்களிடம் கேட்கக்கூடாது என்று. அவர் சொன்ன பதில் எனக்கு பிடித்து விட்டது. பின்னர் இரு வீட்டு பெற்றோரும், பேசி எங்களுடைய திருமணம் நடைபெற்றது" என்று கூறியுள்ளார்.