83 வயதில் தனது 29 வயது 9-வது மனைவியை பிரிந்த "காட்பாதர்" நடிகர்..!

United States of America Actors Hollywood Movies Hollywood
By Karthick Sep 10, 2023 05:32 AM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பாசினோ தனது 9-வது மனைவியிடம் இருந்து புரிந்துள்ளார்.

அல் பாசினோ

உலகளவில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான "காட்பாதர்" படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் அல் பாசினோ. இவர் நடிப்பில் வெளியான 'ஸ்கேர் பேஸ்', 'சென்ட் ஆப் எ உமன்', 'ஹீட்', 'ஐரிஷ் மேன்' போன்ற படங்கள் உலகளவில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட திரைப்படங்களாக உள்ளது.

al-pacino-divorced-his-9th-wife

தற்போது 83 வயதாகும் நடிகர் அல் பாசினோ இது வரை 8 முறை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். சட்டபூர்வமாக பிரிந்த பிறகும், மனைவிகளால் பிறந்த குழந்தைகளின் வளர்ப்பு செலவை இவரே கவனித்து வரும் நிலையில், பிரிந்த மனைவிகளுக்கு ஜீவனாம்சம் அளித்துள்ளார்.

9-வது திருமணமும் முறிந்தது

இந்நிலையில், தான் கடந்த ஆண்டு டந்த ஆண்டு 29 வயதான நூர் அல்பலா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஹாலிவுட் திரைத்துறையில் பணியாற்றி வரும் நூர் அல்பலா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார்.

al-pacino-divorced-his-9th-wife

இந்நிலையில், தான் அல் பாசினோவிடம் இருந்து அவரது 9-வது மனைவி நூர் அல்பலா விவாகரத்து பெற்று நிலையில், கோர்ட்டில் அனுமதி பெற்று தனது மூன்று மாத கைக்குழந்தையையும் கட்டுப்பாட்டில் நூர் எடுத்துள்ளார்.