கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சிம்பிள் உணவுகள் - இதை நோட் பண்ணுங்க..

Cholestrol Healthy Food Recipes
By Sumathi Aug 16, 2024 12:30 PM GMT
Report

கொழுப்பின் அளவை குறைக்க உதவும் உணவு வகைகள் குறித்துப் பார்ப்போம்.

கொலஸ்ட்ரால்

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற சில தீவிர நோய்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, இதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சிம்பிள் உணவுகள் - இதை நோட் பண்ணுங்க.. | Simple Foods Reduce The Level Of Bad Cholesterol

சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க முடியும். அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

தூங்காமல் இருந்தால் கருவுறுதலில் சிக்கலா? இனப்பெருக்க ஹார்மோன் பிரச்சனை வேறு!

தூங்காமல் இருந்தால் கருவுறுதலில் சிக்கலா? இனப்பெருக்க ஹார்மோன் பிரச்சனை வேறு!

உணவு வகைகள் 

ஓட்ஸில் நார்ச்சத்தும் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதை காலை உணவில் உட்கொண்டால் நாள் முழுதும் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.

oats

முழு தானியங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். கினோவா, கோதுமை, தினை போன்ற முழு தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. மேலும், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியமும் உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

berry fruits

பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் பல வித உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். இதனை பல வகைகளில் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.