சிம்புவுடன் திருமணம்? வாய்ப்பே இல்லை - வரலட்சுமி சரத்குமார் பளீச்!
சிம்பு - வரலட்சுமி திருமண வதந்தி வைரலாக பரவி வருகிறது.
சிம்பு - வரலட்சுமி
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவருடைய திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கமான ஒன்று.
திருமணம்?
இந்நிலையில், சமீப காலமாக சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு மருமகனாக போவதாகவும், வரலட்சுமி சரத்குமாரை திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல் படுவைரலாகி வருகிறது. முன்னதாக, திருமணம் பற்றி பேட்டி ஒன்றில் பேசிய வரலட்சுமி, காதல் மற்றும் திருமணத்தை பற்றிய படம் தான் கன்னிராசி.
ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பரவும் நிலையில் ரசிகர்கள் இந்த வதந்தி குறித்து கேள்வி எழுந்துள்ளது.