நடிகர் சிம்பு குடும்பத்திற்கு வந்த புதுவரவு; குதூகலத்தில் குடும்பம் - குவியும் வாழ்த்துக்கள்!

Silambarasan Tamil Cinema Kuralarasan T. Rajendar
By Sumathi Jan 24, 2024 07:52 AM GMT
Report

நடிகர் சிம்புவின் தம்பிக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு

தமிழ் சினிமா உலகின் பன்முகத் தன்மைக் கொண்டவர் டி ராஜேந்தர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இவர் சினிமாவில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார்.

actor simbu

இவருக்கு, இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சிம்புவின் தம்பி குறளரசன் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார்.

சிம்பு அப்படித்தான்; அதனால்தான் அவரை ரொம்ப பிடிக்கும் - மனம் திறந்த ஜோதிகா!

சிம்பு அப்படித்தான்; அதனால்தான் அவரை ரொம்ப பிடிக்கும் - மனம் திறந்த ஜோதிகா!

புது வாரிசு

அதன்பின் பெரிதாக சினிமாவில் ஈடுபாடு காட்டவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். நபீலா அஹமத் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் 2019ல் இருவீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், குறளரசன் மனைவி நபீலா கர்ப்பமாக இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

simbu family

தொடர்ந்து, பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, சிம்புவின் தங்கையான இலக்கியாவிற்கும் மகன் பிறந்தார். இதன் மூலம், மாமாவான சிம்பு தற்போது பெரியப்பா ஆகியுள்ளார். மேலும், ரசிகர்கள் சிம்புவின் திருமணம் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பிய வண்ணம் உள்ளனர்.