சில்க் ஸ்மிதா திருமணம் செய்யவிருந்த நபர் யார் தெரியுமா? வெளியான சீக்ரெட்
சில்க் ஸ்மிதா திருமணம் செய்யவிருந்த நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சில்க் ஸ்மிதா
80ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. இவர் தற்கொலை செய்துக்கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வைரல் தகவல்
இந்நிலையில், சில்க் ஸ்மிதா பற்றி பிரபல நடன அமைப்பாளரான புலியூர் சரோஜா பேசியிருப்பதாவது, "ஒருமுறை நான் திருப்பதி செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர் ஒரு நகை பாக்ஸை கொண்டுவந்து காண்பித்து நான் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன் என்று சொல்லி எனது காதுக்குள் அந்த பெயரை சொன்னார்.
அவரிடம் ராதாகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்தார். அவரது மகனுக்கும் எனக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக சொல்லி அந்த பையனின் பெயரைத்தான் என்னுடைய காதில் சில்க் ஸ்மிதா கூறினார்" என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது கவனம் பெற்று வருகிறது.