சில்க் ஸ்மிதா கடித்து வைத்த ஆப்பிள்..ரூ. 2 லட்சத்திற்கு ஏலமா? வெளியான உண்மை!
சில்க் ஸ்மிதா சாப்பிட்ட ஆப்பிள் எவ்வளவுக்கு ஏலம் போனது என்ற தகவல் வைரலாகியுள்ளது.
கடித்த ஆப்பிள்..
80-ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவரின் கிறங்க வைக்கும் கண்கள் மற்றும் சிரிப்புக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இப்படி புகழின் உச்சத்தில் இருந்த போதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில்க் ஸ்மிதா கடந்த 1996-ம் ஆண்டு தனது 35 வயதில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், சில்க் ஸ்மிதாவின் ஒரு சிறு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் சாப்பிட்டு மிச்சம் வைத்த ஆப்பிள் ஒன்று ஏலம் விடப்பட்டதில் அதனை வாங்க ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டாக கூறப்படுகிறது.
சில்க் ஸ்மிதா
அதாவது, ஒரு படப்பிடிப்பின்போது, ஷாட் இடைவெளியில் ஆப்பிள் சாப்பிட ஆரம்பித்தார் சில்க் ஸ்மிதா, ஒரு பக்கம் கடித்தவுடன், ஷாட் தயாரானதும், அவர் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆப்பிளை ஒதுக்கி வைத்துவிட்டு நடிக்கச் சென்றுவிட்டார்.
அதை கவனித்த ஒருவர் ஆப்பிளை எடுத்து வைத்துள்ளார். இதனை ஸ்டிஸ் ரவி படம்பிடித்துள்ளார். இதையடுத்து, சில்க் ஸ்மிதா சாப்பிட்ட அந்த ஆப்பிள் ஏலம் விடப்பட்ட போது, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அதன் விலை குறித்து பல்வேறு வதந்திகள் உள்ளன.
ரூ. 2 லட்சம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை ரூ. 1 லட்சத்துக்கு வாங்கியதாக வேறு ஒருவர் கூறுகிறார். வெறும் ரூ. 200 மட்டுமே ஏலம் போனது என்கின்றனர் சிலர். மற்றவர்கள் 25000 ஆயிரம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த ஆப்பிள் எவ்வளவு வாங்கப்பட்டது என்ற தகவல் தெறியவில்லை.