அந்த நடிகையோடு சீரியஸாக இருந்தேன்; இல்லைனா சில்க் ஸ்மிதா தான்..நடிகர் ஓபன்டாக்!
பிரபல இயக்குனரும், நடிகருமான ஜி எம் குமார் சில்க் ஸ்மிதாவை காதலித்திருப்பேன் என கூறியுள்ளார்.
அந்த நடிகையோடு..
'கன்னி ராசி' படத்தில் எழுத்தாளராக சினிமாவில் தன்னுடைய கேரியரை துவங்கிய ஜி எம் குமார், அதன் பிறகு, காக்கி சட்டை, மை டியர் மார்த்தாண்டன், போன்ற படங்களில் எழுத்தாளராக பணியாற்றினாலும், துணை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகை சில்க் ஸ்மிதா மீதான தன்னுடைய கிரஷை வெளிப்படையாக கூறியுள்ளார். சில்க் ஸ்மிதா அருமையான நடிகை மட்டுமல்ல அனைவருக்கும் உதவ வேண்டும் என நினைக்கும் பெண்.
நடிகர் ஓபன்டாக்
அவர் தன்னை நன்றாக பார்த்துக் கொள்ளக் கூடிய ஒரு உண்மையான காதல் உறவை தேடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நான் தன்னுடைய மனைவி பல்லவியுடன் சீரியஸான காதலில் இருந்தேன்.
எனவே சில்க் ஸ்மிதாவை காதலிக்க முடியவில்லை. ஒருவேளை பல்லவியை காதலிக்கவில்லை என்றால், கண்டிப்பாக சில்க்கை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பேன் என தெரிவித்துள்ளார்.