டிரைவர் முதல் வேலைக்காரன் வரை .. சில்க் ஸ்மிதா அப்படி நடந்துக்குவாங்க - பிரபலம் பளீச்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகை சில்க் ஸ்மிதா குறித்து இயக்குநர் கிருஷ்ணா வம்சி பேசியுள்ளார்.
சில்க் ஸ்மிதா
80-ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவரின் கிறங்க வைக்கும் கண்கள் மற்றும் சிரிப்புக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இப்படி புகழின் உச்சத்தில் இருந்த போதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில்க் ஸ்மிதா கடந்த 1996-ம் ஆண்டு தனது 35 வயதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் சில்க் ஸ்மிதா குறித்து இயக்குநரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணா வம்சி பேசியுள்ளார். அவர் கூறியதாவது "இயக்குநர் வரப்பிரசாத் ராவிடம் வேலைக்கு சேர்ந்த பின்னர் நான் வேலை செய்வதை பார்த்த சில்க் ஸ்மிதா என்னை பாராட்டியுள்ளார். சில்க் ஸ்மிதா தயாரிப்பில் உருவான ஒரு படத்தில் சில மாதங்கள் நானும் வேலை செய்திருக்கிறேன்.
மறக்க முடியுமா?
அவரிடம் வேலை செய்த பின்னர் எனக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்து. நான் படங்களை இயக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு நாள் என்னைக் கடந்து ஒரு கார் சென்றது. அந்த கார் என்னை நோக்கி திரும்பி வந்தது.
பின்னர் என் முன்னால் வேகமாக பிரேக் போட்டு நின்றது. அந்த காருக்குள் இருந்த நடிகை சில்க் ஸ்மிதா காரின் கண்ணாடிகளை இறக்கினார். அவரைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியாகி விட்டேன். சில்க் ஸ்மிதா என்னைப் பார்த்து, என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார்.
உடனே நான் உங்களை மறக்க முடியுமா? என்னை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா.. இல்லையா என்று பலமுறை யோசித்து இருக்கிறேன் என்று சொன்னேன். அப்போது நான் இயக்கிய படங்களை பார்த்ததாகவும், அந்த படங்கள் நன்றாக இருந்ததாகவும் சில்க் ஸ்மிதா கூறினார்.
அவரை பொறுத்தவரை டிரைவராக இருந்தாலும் சரி, ஒரு மேக் அப் மேனாக இருந்தாலும் சரி, தன்னிடம் வேலை செய்பவராக இருந்தாலும் சரி. அவர்களை தனது சொந்தக்காரர்கள் போல தான் நடத்துவார்" என்று தெரிவித்துள்ளார்.