சில்க் ஸ்மிதா என் கணவரை தான் காதலிச்சாங்க; எங்கிட்டயே சொன்னாங்க - நடிகை சுலக்ஷனா பளீச்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
சில்க் ஸ்மிதா குறித்து நடிகை சுலக்ஷனா பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
நடிகை சுலக்ஷனா
தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுலக்ஷனா.
தூரல் நின்னு போச்சு படம் மூலம் அறிமுகமாகி, தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, ராஜதந்திரம், வைகாசி பொறந்தாச்சு, சின்னத்தம்பி உள்ளிட்ட பல ஹி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகை சில்க் ஸ்மிதா பற்றி பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறுகையில் சில்க் ரொம்பவே பாசமான பொண்ணு. அவங்க நடித்த கேரக்டருக்கும் அவருடைய நிஜ கேரக்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. ரொம்ப தங்கமான பொண்ணு. சில்க் பற்றி தெரிஞ்சவங்க அவங்கள நல்லவங்க என்றுதான் சொல்லுவாங்க.
சில்க் ஸ்மிதா காதல்
ரொம்ப பாசமான பொண்ணு அப்பவே சில்க் என்னிடம் நான் தான் உங்க கணவரை முதல்ல லவ் பண்ணேன். ஆனா நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்க அப்படின்னு சொல்லுவாங்க. அப்ப கூட நான் அப்படியே இருந்துகிறேன். நீ வேணா என் கணவரை லவ் பண்ணிக்கோ அப்படின்னு நான் சொல்லி இருக்கிறேன்.
அதற்கு சில்க் ஸ்மிதா வேண்டாம் என்று சொல்லிடுவாங்க. சிலுக்கு என்னிடமே என்னுடைய கணவர் பற்றி பேசும்போது எனக்கு தப்பா எடுக்கத் தோணாது. இது என்னுடைய கணவருக்கும் தெரியும். பொதுவாக இறந்து போனவங்களை பார்க்கிறது எனக்கு ரொம்பவும் பயம்.
அதனாலதான் நான் சில்க் ஸ்மிதா இறந்தபோது போய் பார்க்கவில்லை. சில்க் தற்கொலை பண்ணிக்கிற ஆளு கிடையாது. அவங்க ரொம்ப தைரியமான பொண்ணு. ஏதோ எங்கேயோ தப்பு நடந்திருக்கு என்றுத் தெரிவித்துள்ளார்.