என்னோட இந்த நிலைமைக்கு அவர் தான் காரணமே - பாக்யராஜ் குறித்து மனம் திறந்த பிரபல நடிகை
இயக்குனர் பாக்யராஜை தனது குரு என நடிகை சுலக்ஷனா தெரிவித்துள்ளார்.
சுலக்ஷனா
தமிழ் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட வெகு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சுலக்ஷனா. தனது இரண்டரை வயதிலேயே நடிப்பு வட்டத்திற்குள் வந்தார். பல்வேறு மொழிகளில் நடித்து கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக இன்று வரை விளங்கி வருகிறார்.
இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த "தூறல் நின்னு போச்சு" திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில், பல கரக்க்ஷன்களை சொல்லிக் கொடுத்து இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என்று சொல்லிக் கொடுத்து
அவர் தான் குரு
நடிப்பில் இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் பாக்யராஜ் சொல்லிக் கொடுத்தது தான். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு தனக்கு அவரோடு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
திரைப்படத்தில் நான் நடிக்கும் போது என்னுடைய நடிப்பை பாக்யராஜ் பாராட்டவே இல்லை என்றும் நான் அவர் நினைத்தபடியே அப்படியே நடித்து முடித்து இருக்கிறேன். அதனால் தான் என்னை பாராட்டவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் நடித்தது பிடிக்கவில்லை என்றால் அவர் அப்போவே சொல்லி இருக்கணும்?
ஆனால் அப்படி சொல்லவில்லை. அப்போ நான் சரியாகத்தான் செய்திருக்கிறேன். முதல் படமே சுமார் ஒரு வருடங்களுக்கு ஓடி இருக்கிறது. இது மகிழ்ச்சியாக தான் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
