ஹேக் செய்யப்பட்ட சிலம்பரசன், நயன்தாராவின் X பக்கம் - நயன்தாரா போட்ட டிவீட்

Karthikraja
in பிரபலங்கள்Report this article
நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக்
சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் பக்கங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் தற்போது நடிகர் சிலம்பரசன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
நயன்தாரா
சிலம்பரசனின் எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள் அதில், என்னை பின்பற்றுபவர்கள் யாரேனும் கிரிப்டோ கரன்சியை விரும்புகிறீர்களா என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் பக்கம் மீட்கப்பட்டு அந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
இதே போல் நடிகை நயன்தாராவின் x பக்கமும் ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரத்தை பதிவிட்டுள்ளார். உடனடியாக அந்த பக்கத்தை மீட்டு அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.
Account has been hacked. Please ignore any unnecessary or strange tweets being posted.
— Nayanthara✨ (@NayantharaU) September 13, 2024
இது தொடர்பாக பதிவிட்டுள்ள நயன்தாரா, " எனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டது. ஏதாவது தேவையற்ற பதிவுகள் தென்பட்டால் பொருட்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.