ஒற்றை புள்ளி ட்வீட் - 12 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

Iran Prison X Social Media
By Karthikraja Sep 02, 2024 03:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

ஒற்றை புள்ளியை ட்வீட் செய்ததற்காக சமூக ஊடக பயனருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை புள்ளி ட்வீட்

பிரபல சமூக வலைத்தளமான X ல் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி தனது பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானை சேர்ந்த ஹொசைன் ஷான்பேஜாதே(Hossein Shanbehzadeh) என்பவர் ஒற்றை புள்ளியை மட்டும் வைத்து ட்வீட் செய்தார். 

hossein shanbehzadeh iran

இவரின் இந்த ட்வீட் அலி கமேனியின் டீவீட்டை விட அதிக லைக்ஸ் பெற்று கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து ஹொசைன் ஷான்பேஜாதே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் X கணக்கு உடனடியாக செயலிழக்கப்பட்டது. 

239 பயணிகளுடன் காணாமல் போன MH370 மலேசிய விமானம் - 10 ஆண்டுக்கு பின் விலகிய மர்மம்

239 பயணிகளுடன் காணாமல் போன MH370 மலேசிய விமானம் - 10 ஆண்டுக்கு பின் விலகிய மர்மம்

சிறை தண்டனை

இதையடுத்து ஹொசைன் ஷான்பேஜாதேக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதில், இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்காக 5 ஆண்டுகளும், இஸ்லாமிய புனிதங்களை அவமதித்ததற்காக 4 ஆண்டுகளும், சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பியதற்காக 2 ஆண்டுகளும், அரசு எதிரான பிரச்சாரத்திற்காக 1 ஆண்டுகள் என 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இவரின் கைதுக்கு பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 2019 ஈரானிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக "புனிதங்கள் மற்றும் இஸ்லாமிய குடியரசின் தலைவரை அவமதித்ததாக" குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.