நீங்கள் வேலை பார்க்கும் இடம் உங்களுக்கானது இல்லை என உணர்த்தும் அறிகுறிகள் இதுதான்!
வேலை பார்க்கும் இடம் ஏற்றதா என்பது பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பணிபுரியும் இடம்
ஒவ்வொருவரும் தங்கள் பணி சார்ந்து திறன் மிகுந்தவர்களாகவும், அனுபவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது உழைப்பால் பெருமளவிற்கு உற்பத்தி திறன் பெற வேண்டும் என்று உழைப்பார்கள். ஆனால் பணிபுரியும் இடமும், அங்கு உள்ள சூழலும் ஆரோக்கியமானதாக இல்லை என்றால் தனது வேளையில் இருக்கும் ஈடுபாடு குறைய தொடங்கும்.
பணி சார்ந்து நிர்ணயம் செய்யப்படும் இலக்குகள் மற்றும் காலக்கெடு போன்றவை இயல்பான விஷயம் தான் என்றாலும் கூட, இதைத் தாண்டி ஊழியர்களின் மன நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் ஆகிறது.
அறிகுறிகள்
இதனை தொடர்ந்து, பணிச்சுமை அதிகமாக இருப்பதால் எரிச்சல் உணர்வு வரும், யாரிடமும் இயல்பாக பழகாமல் அமைதியாக கோபம் கொண்டவராக இருப்பீர்கள். குடும்பம் சார்ந்து எந்த பிரச்னையும், மனக்குழப்பமும் இல்லை என்றாலும், பணி சார்ந்து மன அழுத்தம் ஏற்படும். நமது உயர் பதவியில் இருப்பவர்கள் கடிந்து நடப்பார்கள், சக ஊழியர்களும் புறம் பேசி தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்துவார்கள்.
நட்பாக பழக வாய்ப்பு கிடைக்காமல் தனித்து விடபட்டதாக உணர்வோம். நம் அலுவலக வாழ்க்கைக்கும், தனி வாழ்க்கைக்கு இடையே சீரான சமநிலையை கடைபிடிப்பதற்கு உண்டான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அலுவலக பணி சுமை காரணமாக நம் வீட்டின் மீதும், குடும்ப உறவுகள் மீதும் அக்கறை செலுத்த முடியாமல் போகுமானால் அது நம் மன நலனை பாதிக்கும்.