ஒருதலையாக காதலிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
ஒருதலை பட்சமாக காதலிப்பதால் ஏற்படும் உடல் நல பதிப்புகள் குறித்து காணலாம்.
ஒருதலை காதல்
ஒருவரை மற்றொருவரை காதலிப்பது பெரும்பாலும் அது ஒருதலைப்பட்சமாக தான் இருக்கும். அதில் சிலர் தனது காதலை வெளிப்படுத்தி ஒரு காதல் உறவுக்குள் செல்வார்கள். ஒரு சிலர் சொல்லாமலோ அல்லது நிராகரிக்கப்பட்டோ அந்த காதலை மனதில் வடுவாக சுமப்பவர்களும் இருக்கின்றனர்.
அப்படி நாம் ஒரு பெண்ணையோ அல்லது ஆண்னையோ ஒருதலை பட்சமாக காதலிப்பதால் மன ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல், சில உடல் நல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது என கூறுகின்றனர். இன்றுவரை முரட்டு சிங்கள் என்று சுற்றி கொண்டு இருக்கும் பலருக்கு இந்த ஒருதலை காதல் நிச்சயம் தாக்கி இருக்கும்.
அதாவது ஒரு காதலர்கள் சமமாக ஒருவருக்கொருவர் அன்பையும் ஆதரவையும் வழங்கும்போதும் அந்த உறவு நீண்ட நாட்கள் நிலைத்திருக்கிறது. அதன் மூலம் மனதளவில் நிம்மதியாகவும் எந்த பாதிப்பும் பெரிதாக இருக்காது.
இந்த நிலையில், ஒருதலை பட்சமாக காதலிக்கும் அல்லது பாசத்தை வெளிப்படுத்தும் நபர் மனதளவில் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.இதனால் கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் அதிகரித்து நேர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மன அழுத்தம்
ஒருதலைப்பட்ச காதல் நிராகரிக்கப்படும் போது மனச்சோர்வு ஏற்படுகிறது. மேலும் அந்த விஷயத்தை பற்றி சிந்தித்து கொண்டே இருக்கும் போது அது மன அழுத்தமாக மாறுகிறது.
ஒரு நபர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தால் தவறான முடிவுகளை எடுக்க நேரிடலாம்.
கவலை
ஒருதலைப்பட்சமான காதல் மனதில் இனம்புரியாத ஒரு பயம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும். ஒருவேளை தனது காதல் நிராகரிக்கப்பட்டால் என்னாகும் என்று அவர்களின் எதிர்காலத்தை பற்றி யோசித்து பதட்டமடைவதாக கூறப்படுகிறது.
மேலும் உறவுகளின் மீது வெறுப்பும், அவநம்பிக்கையும் உண்டாக்கிறது.
சுயமரியாதை
ஒருதலைப்பட்ச காதலால் ஒருவர் தனது சுயமரியாதையை இழக்க நேரிடலாம். இதன் காரணமாக ஆணோ பெண்ணோ தங்களை குறைவாக மதிப்பிடத் தொடங்குவதால் தாழ்வு மனப்பாண்மை உண்டாகிறது.
இது அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது.
எதிர்மறை சிந்தனை
சில சமயத்தில் ஒருதலைப்பட்ச காதலில் நிராகரிப்பு மற்றும் ஏமாற்றம் அடையும் போது, மிகவும் அவநம்பிக்கையானவராக மாறுகின்றனர். இதனால் அந்த நபருக்குள் எதிர்மறை
சிந்தனைகள் உருவாகின்றது. மேலும் சில சமயங்களில் சரி மற்றும் தவறுகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் ஆபத்தான சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்கின்றனர்.