AC அறையில் தூங்குறீங்களா? அதில் இவ்வளவு பாதிப்பா - கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
AC ரூமில் அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
AC பயன்பாடு
இரவு முழுவதும் ஏசியில் இருப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி பிரச்சனைகளை ஏற்படுத்தும். சருமம் மற்றும் கண்களில் வறட்சியை ஏற்படுத்தும்.
ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று சுவாச மண்டலத்தில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி இருமல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
என்ன பாதிப்புகள்
இது தூக்க முறையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். தூங்கும் போது அசௌகரியம் மற்றும் அடிக்கடி விழிப்பு வரக்கூடும். ஏசிகள் தூசி, பூஞ்சை மற்றும் பிற ஒவ்வாமைகளை ஏற்படுத்தி தொற்றுநோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்யும். குளிர்ந்த காற்றில் நேரடியாக தூங்குவதால் தசை இறுக்கம் மற்றும் மூட்டு வலிக்கு வழிவகுக்கும்.
இதனால் தசை வலி, கழுத்து வலி அல்லது மூட்டு வலி ஏற்படலாம். மேலும், ஏசி பயன்படுத்துவதால் உட்புற ஈரப்பதத்தை குறைக்கலாம். போதுமான திரவங்களை குடிக்காத பட்சத்தில் நீரிழப்பு ஏற்படலாம். இரவில், 2 முதல் 3 மணி நேரம் கழித்து தானாகவே ஏசி ஆஃப் ஆகுமாறு செட் செய்து கொள்ளுங்கள்.
ஏசி-யில் 22 முதல் 26 டிகிரி செல்சியஸ் லிமிட்டில் வெப்பநிலையை பராமரித்தல் மற்றும் ஹியூமிடிட்டி லெவலை 40 முதல் 60% வரை வைப்பது பயனுள்ளதாக இருக்கும். அதோடு ஏசி-க்களில் HEPA ஃபில்டர்களைப் பயன்படுத்துவது தூசி மற்றும் அலெர்ஜென்ஸ்களை குறைக்க உதவும்.