இனி வெயிலை பத்தி கவலை இல்லை - வந்தாச்சு AC Helmet? விலை தெரியுமா!

Summer Season India Heat wave
By Karthick Apr 18, 2024 05:47 AM GMT
Report

அடிக்குற வெயிலுக்கு ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுவது என்பது பெரும் இடைஞ்சலை கொடுக்கிறது.

கோடையில் ஹெல்மெட்

ஹெல்மெட் என்பது மனிதர்களின் உயிர் காக்கும் கருவியாகும். ஆகையால், ஹெல்மெட் கட்டாயம் என்பதை தாண்டி, அவசியமான ஒன்று. அரசும் தற்போது அதனை கடுமையான சட்டமாக்கியுள்ளது.

ac-helmet-gujarat-vadodra-traffic-police

ஆனால், அடிக்கும் வெயிலில் traffic பிரச்சனையில் ஹெல்மெட் அணிந்து செல்வது என்பது பெரும் சிக்கலை மக்களுக்கு அளிக்கிறது. தலை முழுவதும் வியர்த்து, மக்கள் புறப்படும் போது இருக்கும் புத்துணர்வை முழுவதுமாக இழந்து விடுகிறார்கள்.

சுட்டெரிக்க போகும் கோடை வெயில்..தற்காத்து கொள்ள என்ன செய்யலாம்..? சில டிப்ஸ் இதோ

சுட்டெரிக்க போகும் கோடை வெயில்..தற்காத்து கொள்ள என்ன செய்யலாம்..? சில டிப்ஸ் இதோ

இந்த சூழலில் தான் இரண்டையும் எப்படி செய்வது என்ற சந்தேகம் என்பது பலருக்கும் இருக்கும். அதற்கு பதிலாக தான் AC helmet வந்துள்ளது. ஆம், நீங்கள் படிப்பது உண்மைத்தான். AC பொருத்தப்பட்ட ஹெல்மெட் சந்தைக்கு வந்து பல வருடங்கள் ஆகியுள்ளது.

ac-helmet-gujarat-vadodra-traffic-police

வெளிநாடுகளில் பரவலாக கிடைக்கப்படும் இவை, import செய்தால் இந்தியாவிலும் கிடைக்கின்றன. வெயிலில் கால் கடுக்க நின்று மக்கள் பணியாற்றும் போலீஸ்க்காரர்கள் ஹெல்மெட் அணிந்த படியே தான் வேலை செய்யவேண்டி இருக்கின்றது.

போலீசாருக்கு AC helmet 

அவர்களுக்காக தான் தற்போது AC ஹெல்மெட்டை IIM மாணவர்கள் தயாரித்து வழங்கியுள்ளார். குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் இருக்கும் போக்குவரத்து துறை காவலர்களுக்கு இந்த ஹெல்மெட்டை முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

ac-helmet-gujarat-vadodra-traffic-police

பேட்டரியால் இயங்கும் இந்த ஹெல்மெட் பேன் கொண்டுள்ளதால், அதன் மூலமாக குளிர்ந்த காற்றை அளிக்கும். தலையில் வியர்வை தங்கினால், அது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதனை சரிசெய்யவே இந்த AC helmet பயன்பாட்டில் இருக்கின்றது. சரி, இந்த ஹெல்மெட்டின் விலை என்ன என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆன்லைனில் கிடைக்கும் இந்த ஹெல்மெட்டின் விலை சுமார் 34 ஆயிரம் ரூபாயாகும்.