சுட்டெரிக்க போகும் கோடை வெயில்..தற்காத்து கொள்ள என்ன செய்யலாம்..? சில டிப்ஸ் இதோ

Tamil nadu Summer Season Heat wave
By Karthick Apr 09, 2024 02:42 AM GMT
Report

கோடை காலம் வந்துவிட்ட நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் வெயில் இப்பொது வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டது.

கோடை வெயில்

தமிழகத்தில் இருப்போருக்கு உங்களுக்கு சுத்தமாக புடிக்காத ஒரு விஷயம் என்ன வென்று கேட்டால், பெருமபாலானோர் கோடை வெயிலை தான் குறிப்பிடுவார்கள்.

how-to-protect-ourselves-from-hot-climate

அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் அக்னி நட்சத்திரம் காலத்தில் கடுமையாக இருக்கும் பட்சத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுவார்கள்.

how-to-protect-ourselves-from-hot-climate

இன்னும் அக்னி நட்சத்திரமே வராத சூழலில், தற்போதே மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி தாண்டி மக்களை கொளுத்தி வருகிறது. இப்படி கொடுமைப்படுத்தப்போகும் வெயிலை தாக்குப்பிடிக்க சில டிப்ஸ் இங்கே தருகிறோம்.

நைட் தூக்கம் விட்டு விட்டு வருதா..? உயிருக்கே ஆபத்தா இருக்கலாம்..? தெரிஞ்சிக்கோங்க..!

நைட் தூக்கம் விட்டு விட்டு வருதா..? உயிருக்கே ஆபத்தா இருக்கலாம்..? தெரிஞ்சிக்கோங்க..!

சில டிப்ஸ் 

  • அதிகளவில் தண்ணீர் பருகுங்கள். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் பருகுங்கள்.
  • மேலும், எலுமிச்சை சாறு, மோர், இளநீர், தர்பூசணி, நுங்கு, கரும்பு, பழச்சாறுகள்(Fruit Juice) போன்றவற்றை குடிப்பது நல்லது.

how-to-protect-ourselves-from-hot-climate

  • மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவது உடலுக்கு உகந்தது.
  • மதிய வேளைகளில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல நல்லது.
  • வெயில் நேரங்களில் மது அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதே போல சூடான உணவு, பானங்களை தவிர்ப்பதும் நல்லது.