நைட் தூக்கம் விட்டு விட்டு வருதா..? உயிருக்கே ஆபத்தா இருக்கலாம்..? தெரிஞ்சிக்கோங்க..!
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரவில் தூக்கம் விட்டு விட்டு தான் வருகின்றது.
சரியான தூக்கமின்மை
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வேலை பலு, ஸ்ட்ரெஸ், தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் போன்ற பல காரணங்கள் வரிசை கட்டலாம். ஆனால், உடல்நலத்தை சீராக வைத்து கொள்ள தூக்கம் என்பது மிக முக்கியமானது என்பதை நாம் உணரவேண்டும்.
நாள் முழுக்க வேலை செய்து உழைத்து களைத்து போகும் உடலும், மனதும் சற்று இளைப்பாற நாம் இடம் அளிக்கவேண்டும்.
உயிருக்கே ஆபத்தாக...
அப்படி தூங்கினாலும், தூக்கத்தின் போது அவ்வப்போது முழிப்பு வந்தால், அது உயிருக்கே ஆபத்தான ஒரு பிரச்சனையாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, வயது வந்தவர்களில் 15 % மட்டுமே சரியாக தூங்குகின்றனர்.
ஆனால், ஆனால் அப்படி தூங்கலாம் இருப்பது இறப்பு விகிதத்தை அதிகரிப்படுத்துதல், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுத்துதல், உடல் பருமன் மற்றும் இதய நோய் என பல பிரச்சனைகளை அளிக்க கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.