இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? - இதை பண்ணுங்க போதும்!

walnuts dry fruits healthy tips
By Anupriyamkumaresan Jun 15, 2021 09:34 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in ஆரோக்கியம்
Report
123 Shares

பாதாம், வால்நட் பருப்புகள் ஆரோக்கியமான கொட்டைகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இது ஊட்டச்சத்து நிறைந்தவை. வால்நட் பருப்புகளை தினசரி சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும்.

குறிப்பாக இவை வாழ்நாள் நோயான நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் போன்ற நோய்களை வரவிடாமல் தடுக்க செய்யும். வால்நட் மூளைக்கு நன்மை செய்ய கூடியது.

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? - இதை பண்ணுங்க போதும்! | Walnuts Dry Fruits Healthy Tips

தினமும் 4 வால்நட் பருப்புகள் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். உலகின் 11 நாடுகளில் 55க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் நடத்திய ஆய்வில் வால்நட் பருப்புகள் சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய இழை, புரதம், வைட்டமின்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஒமேகா 3 ஆல்பார் லினோலெனிக் அமிலம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தினமும் 4 பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் எடையை கட்டுப்படுத்தி வைக்கலாம். புற்றுநோய், உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்களை விலக்கி வைக்கலாம் என ஆய்வில் கூறப்படுகிறது. வால்நட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் அறிவாற்றல் திறன், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பிற வாழ்க்கை முறை நோய்களிலிருந்து விலக்கு அளிக்க முடியும்.

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? - இதை பண்ணுங்க போதும்! | Walnuts Dry Fruits Healthy Tips

சைவ பிரியர்களுக்கு ஏற்றது:

சைவ உணவு எடுத்துகொள்பவர்கள் ஒமேகா 3 குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதனால் மோனோசாச்சுரேட்டர் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் அனைத்து வகையான கொட்டைகளையும் சைவ உணவு உண்பவர்கள் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். வால்நட் பருப்புகள் மூளை போன்றே இதய ஆரோக்கியத்தையும் சிறப்பாக் வைத்திருக்கிறது.

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? - இதை பண்ணுங்க போதும்! | Walnuts Dry Fruits Healthy Tips

தூக்கம் வரும்:

தூக்கமின்மை பிரச்சனையை மெலடோனின் ஹார்மோன் உண்டாக்குகிறது. இந்த மெலடோனின் வால்நட் பருப்புகளில் உள்ளது. தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் வால்நட் பருப்புகளை எடுத்துகொள்ளலாம். இது படிப்படியாக தூக்கத்தை வர செய்யும்.

டயட் இருக்கனுமா:

வால்நட் பருப்புகள் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் கொண்டவை இது டயட்டில் இருப்பவர்களுக்கு நன்மை செய்யும். உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பின் அளவு இதில் சரியாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும் புரதமும் உள்ளது. இது உடலுக்கு தேவையான ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தருகின்றன.

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? - இதை பண்ணுங்க போதும்! | Walnuts Dry Fruits Healthy Tips

இதயத்துக்கு நல்லது:

ஆக்ஸிஜனேற்ற பண்புகளின் சிறந்த மூலம் இது. ஒமேகா 3 அமிலங்களும் அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு உண்டாகும் சேதத்தை குணப்படுத்துகிறது. இன்றியமையாத கொழுப்பு அமிலம் ஆகும். வால்நட் பருப்புகள் இதயக்கோளாறுகள் வராமல் தடுக்கின்றன. நிறைவுற்ற கொழுப்பு இல்லாமல் சாப்பிடுவது இதய நோய்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது. அதிக உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பிரச்சனை உண்டாகாமல் இருக்க, அதை தடுக்க இந்த அக்ரூட் பருப்புகள் உதவுகிறது. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளடக்கியது.