த்ரிஷாவுடன் அந்த சீனா; அப்போ ஜாலி மாமா - மனம் திறந்த சித்தார்த்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர்களின் வேலை குறித்து சித்தார்த் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சித்தா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து, நடிகை அதிதியுடன் காதல் கிசுகிசுவில் அவ்வப்போது சிக்கி வருகிறார்.
ஆயுத எழுத்து
இருவரும் வெளி இடங்களுக்கு ஒன்றாக செல்லும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகுவது வழக்கம். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ஆயுத எழுத்து படத்தில் த்ரிஷாவுடன் தான் இணைந்து நடித்தது குறித்து த்ரிஷாவுடன் லவ் சீனா, ஜாலி மாமா என்றுதான் அனைவரும் தன்னிடம் கூறுவார்கள்.
ஆனால் ஒரு இயக்குநர் மற்றும் நடிகர்களின் வேலை இதைத்தாண்டி செயல்படும். படபடக்கும் வெயிலில் சுட்டெரிக்கும் மணலில் படுக்க வைத்து ஒரு படைப்பாளி, இந்த மூஞ்சியும் அந்த மூஞ்சியும் எந்த ஆங்கிளில் வைத்தால் பார்க்கும் மூஞ்சிக்கு பிடிக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பார்.
அவருடைய அசிஸ்டெண்ட்டை மணிரத்னம் அழகாக காட்ட முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த நிலையில் தனக்கு எப்படி இருந்திருக்கும்.
இதெல்லாம் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயங்கள். மணி சார் எப்போதுமே பாஸ் எனத் தெரிவித்துள்ளார்.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
