என் இதய இளவரசியே.. அதிதியுடன் காதலை உறுதிப்படுத்திய சித்தார்த்?
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதிதி ராவ்
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் அதிதி ராவ் ஹைதாரி. அதனைத் தொடர்ந்து செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் சித்தார்த் உடன் சமீபமாக கிசுகிசுக்கப்பட்டார் அதிதி.

இந்நிலையில், சித்தார்த் அதிதியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு இதய இளவரசி என்றும் கேப்சனும் எழுதி அவரது 36வது பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துடன் சேர்த்து அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சித்தார்துடன் காதல்
அதில், “இதய இளவரசி அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அவை நிறைவேறும் என்று நம்புகிறேன். சூரியனை இன்னும் நீங்கள் நிறைய சுற்றி வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சம்ந்தாவுடன் காதலில் இருப்பதாக வதந்தி பரவியது. இந்நிலையில் அதிதியுடன், மும்பையில் டேட் செய்து வருகிறார் சித்தார்த். இதன் மூலம் இருவரும் காதலில் இருப்பதாகவும், விரைவில் இதை வெளிப்படுத்துவார்கள் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இருவரும் மகா சமுத்திரம் படத்தில் ஒன்றாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil